பல்வேறு விமான நிறுவனங்களின் விமானங்களை தணிக்கை செய்ததில் மொத்த 263 பாதுகாப்பு குறைபாடுகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கண்டறிந்துள்ளது. பெரிய விமானங்களில் அதிக குறைபாடுகள் இருப்பது இயல்பான ஒன்று என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசுக்கு சொந்தமான அலையன்ஸ் ஏர் 57 குறைபாடுகளுடன் முதலிடத்திலும், ஏர் இந்தியா 51 குறைபாடுகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.