ஜனவரி 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையையொட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக மொத்தம் 5,000 போலீசார் தயாராகி உள்ளனர். இதில் பங்கேற்க 2.5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வருகையை நிர்வகிப்பதற்கும் பூஜை நிகழ்வின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பம்பை, நிலக்கல், சபரிமலை பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுளளனர். கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் விரைவுப் படையும் களத்தில் இருக்கும்.