சபரிமலை: உடனடி முன்பதிவு நாளை மறுநாள் முதல் அதிகரிக்க வாய்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல சீசனையொட்டி வரலாறு காணாத கூட்டம் கூடியதால், கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடி தரிசன முன்பதிவு தினசரி 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் குறைந்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த காரணங்களால், நாளை மறுநாள் (நவ.25) முதல் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவை 10 ஆயிரமாக அதிகரிக்க தேவஸ்தானம் கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஆலோசித்து வருவதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி