சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் மற்றும் இசக்கி சுப்பையா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சி.வி.சண்முகம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:News18