உடல் எடையை குறைக்க உதவும் கம்பு.!

உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எடையை குறைப்பதில் கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்கள் கம்பில் உள்ளன. மேலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இவற்றை உட்கொண்டால் நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், நொறுக்குத் தீனிகளை உண்ணும் ஆசை இருக்காது. எனவே, கம்பு உணவுகளை அடிக்கடி உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி