ரஷ்ய உளவுத்துறை துணைத்தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

உக்ரைன், ரஷ்யா இடையே 1,443வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை துணைத்தலைவர் ஜெனரல் விளாடிமிர் அலெக்சிவ் மாஸ்கோவில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை முன்மொழிந்திருந்தாலும், சில நிபந்தனைகளை இரு தரப்பும் ஏற்க மறுப்பதால் போர் தொடர்கிறது. இந்த சூழலில் முக்கிய தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி