உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய வான் வழி தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (பிப்.8) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், 9 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உக்ரேனிய அவசரகால சேவைப் பிரிவினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.