கிராமப்புறங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவை இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கிராமப்புறங்களில் தொழில் தொடங்க உரிமம் கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உரிமம் தேவையில்லை என தற்போது அரசு அறிவித்துள்ளது. மேலும், உரிமம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தவறான தகவலை பரப்புகிறார் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.