தமிழகம், கர்நாடகாவில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி பிரபலமான நித்யானந்தா, பாலியல் புகார்களால் மேலும் அறியப்பட்டார். இந்தியாவில் இருந்து தப்பித்து கைலாசா தீவை உருவாக்கிய அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அவரது சீடர்கள் மறுத்தனர். பல ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் புத்தாண்டு செய்தி வெளியிட்டுள்ள நித்யானந்தா, '2026-ல் சாட்சி பாவத்தை கடைபிடித்தால் புதிய பிறவி அமையும்' என்று தெரிவித்துள்ளார்.