அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நிலை குறித்து பரவும் தவறான தகவல்களை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என அதிமுக கூறியுள்ளது. தமிழ்மகன் உசேனின் உடல்நிலை குறித்து பொய் செய்திகள் பரப்புவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது என கூறப்பட்டுள்ளது. அதிமுகநிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.