ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை ஆஎஸ்எஸ் செய்து வருகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 11) நடைபெறும் SIR-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், 'SIR என்பது முழுக்க முழுக்க குடியுரிமையை ஆய்வு செய்யும் நடவடிக்கை. இது பாஜகவின் திட்டம் அல்ல. ஆர்எஸ்எஸ்-ன் செயல்திட்டம்' என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.