திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பகவத், "ஆர்.எஸ்.எஸ். யாரையும் எதிர்ப்பதற்கோ, எதிரிகளை உருவாக்கவோ இங்கு இல்லை; ஆனால் பலர் சங்கத்தைக் கண்டு அஞ்சி, எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள்" என்றார். மேலும், நாட்டிற்கும் உலகிற்கும் நன்மை செய்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் பரப்புவதே சங்கத்தின் நோக்கம் என்றும் கடந்த 100 ஆண்டுகளில் பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.