சபரிமலையில் ரூ.35 லட்சம் நெய் முறைகேடு.. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 2 மாதங்களில் மட்டும் நெய் விற்பனையில் ரூ.35 லட்சம் மேல் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் அடங்கிய அமர்வு, நிர்வாகத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இன்றி இவ்வளவு பெரிய முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியதோடு, அதிகாரிகளை கொண்ட குழுவை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி