சென்னையில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி எனக்கூறி ரூ.3.30 லட்சம் பணம் பறித்ததாக தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, தலைமை காவலரை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு யாரிடமும் பணம் பறித்துள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.