பாஜக அமைச்சர் வீட்டில் ரூ.90 லட்சம் கொள்ளை

பீகாரின் உயர்கல்வித்துறை பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் டைகரின் பாட்னா வீட்டில், சத் பண்டிகையின் போது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த சமயம் பார்த்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அமைச்சரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், 600 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 7 லட்சம் ரொக்கம் என மொத்தம் 90 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕