தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறுகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (ஏப்.22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.543 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.