மத்திய அரசின் 'விபி-கிராம் ஜி' திட்டத்திற்காக புதிய லோகோவை உருவாக்கும் போட்டியை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த லோகோ வடிவமைப்பிற்கு ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி 'mygov.in' என்ற இணையதளத்தில் லாக்-இன் செய்து, தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம்.