தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் குறித்தும் பலரும் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். இதில் 2 வகையான திட்டம் இருக்கிறது. முதல் திட்டத்தில் ரூ. 25000 + 1 சவரன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்தில் ரூ.50000 + 1 சவரன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாள்கள் முன்பு இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.