தமிழக மகளிர் வங்கிக்கணக்கில் சமீபத்தில் ரூ 5,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பெண்களுக்கு மேலும் ரூ.5,000 நிதியுதவி வழங்க அரசு ஆலோசித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவியாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.