ஓதுவார் பயிற்சி மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை: அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை வடபழனியில் உள்ள ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில், அங்கு பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் 14 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 8939083753, 90478 10365 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி