கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோவை சிறுமியின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவெக ஆட்சியில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.