கான்கிரீட் வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்

கான்கிரீட் வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,852 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும். முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். கான்கிரீட் வீடு திட்டத்தில் ஏற்கனவே ரூ.3,50,000 வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி