வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிகிரி படித்தவர்களுக்கு ரூ.4,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் அவர் அறிவித்திருந்தார். தற்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 75,000 பேர் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.1,000 வரை மட்டுமே உதவித்தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.