விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை - வேளாண் அமைச்சர்

விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த சிறப்பு திட்டத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். மேலும், ரூ.34.72 கோடி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு நெல் விதை மானியம் வழங்கப்படும். ரூ.2 கோடி ஒதுக்கீட்டில் ஏஐ அடிப்படையிலான விவசாயி செயலி அறிமுகம் செய்யப்படும். 38 மாவட்டங்களுக்கும் பயிர்க்காப்பீடு வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி