புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.3,000 பரிசுத் தொகுப்பு

"புதுச்சேரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.3,000 மதிப்பிலான பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்" என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்தப் பரிசுத் தொகுப்பில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான போர்வை, கொசுவலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரம்பகால தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்து குழந்தைகளும் எந்தவித பாகுபாடுமின்றி இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕