ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் பெற்ற இந்த வெற்றி, மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.