தமிழ்நாட்டில் ரூ.296.4 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த சூழலில், இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.197.35 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.8.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.1.17 கோடி மதிப்புள்ள மதுபானம், இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் ரூ.27.51 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி