ரூ.26.40 கோடி மேம்பாலம் 4 நாளில் சேதம்: பிகாரில் பரபரப்பு

பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் ரூ.26.40 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம், திறக்கப்பட்ட வெறும் 4 நாட்களிலேயே சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி பழுதடைந்ததால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானப் பணிகளே இந்த நிலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கட்டுமானத் தரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி