"PM கிசான் ஸம்மான் நிதி" திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் 20-வது தவணையை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமையில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20-வது தவணை 9.7 கோடி விவசாயிகளின் வாங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.