தமிழ்நாட்டுல் உள்ள 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், “கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில், 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த கடன் உதவி மூலம் மக்கள் தங்களது தொழில் நிறுவனங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.