ரூ.2.11 கோடி மோசடி புகார்.. நடிகர் அஜய் வாண்டையார் மீது வழக்கு

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் ரூ. 2.11 கோடி ஏமாற்றியதாக எழுந்த புகாரில், அதிமுகவை சேர்ந்தவரும், நடிகருமான அஜய் வாண்டையார் மீது சென்னை காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனியார் மதுபான விடுதிகளில் மதுபோதையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது அண்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் கைது நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி