தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.