விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்குப் பருவமழை மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணமாக ரூ. 111.96 கோடி 84,848 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ. 20,000 நிவாரணம் வழங்கப்படும். ஏற்கனவே, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 289.63 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி