கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1.10 கோடி தகுதி வாய்ந்த மகளிருக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,000 அளித்து வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான ரூ.1,000 நாளை (ஏப்.15) பெண்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இது கலைஞர் உரிமைத் திட்டத்தின் 20ஆவது டெபாசிட் ஆகும். வரும் 2 மாதங்களில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.