தைலாபுரத்தில் இன்று (ஜூன் 12) நிருபர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது. யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன்" என தெரிவித்துள்ளார்.