கரூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜரானார். சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்ட அவருக்கு, அடுத்த கட்ட விசாரணைக்காக வரும் ஜூலை 27-ம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.