திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

மத்​தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்​கள் முகேஷ் பைரங்​கி, சுனிதா தம்பதி​யினர். ஆனால், இவர்​கள் பெரும்​பாலும் வரன் பார்த்து தராமல் மணப்​பெண் விவரம் கேட்டு வருபவர்​களை ஏமாற்றி வந்துள்​ளனர். இந்​நிலை​யில் அண்​மை​யில் மிகப்​பெரிய கூட்​டுத் திரு​மணத்தை நடத்​தப் போகிறோம் என்று கூறி 42 மணமகன் வீட்​டாரிட​மிருந்து சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதி​க​மான பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி