பிராண்ட் ஃபைனான்ஸ் அமைப்பின் 2026-ம் ஆண்டிற்கான ஆட்டோமோட்டிவ் துறை அறிக்கையின்படி, சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம் உலகின் 3-வது மிக வலுவான ஆட்டோமொபைல் பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச பட்டியலில் 100-க்கு 88.9 பிராண்ட் வலிமை குறியீட்டு (BSI) புள்ளிகளுடன் 'AAA' தரமதிப்பீட்டை பெற்று, இந்திய நிறுவனங்களுக்கு ஒரு புதிய மைல்கல்லை படைத்துள்ளது.