2025ஆம் ஆண்டுக்கான IPL கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை முத்தமிட்டுள்ளது. 18 வருட காத்திருப்புக்கு பிறகு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால் RCB ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.