காரைக்குடி அருகே ரவுடி நவீன் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீபாவளியை முன்னிட்டு நண்பர்களைச் சந்திக்க புரண்டி கிராமத்திற்கு வந்த பிரபல ரவுடி நவீன் (25) என்பவரை, மர்ம நபர்கள் வழிமறித்துக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இச்சம்பவம் குறித்துக் கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕