மறைந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு, அவரது 2வது மகன் அஜித் ராஜா ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணை இன்று (அக்., 12) திருமணம் செய்துகொண்டார். பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வியாசர்பாடியில் வீட்டில் அஞ்சலிக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு முல்லை நகர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது.