தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் மேலாண்மை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஜெகதீஷ் பழனிச்சாமியின் 'ரூட்' நிறுவனம், ஒரு மாபியா போல் செயல்படுவதாக நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா பிம்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்நிறுவனம், திட்டமிட்டு சில கலைஞர்களின் திரை வாழ்க்கையை முடக்குவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்து வரும் நிலையில் ஓவியாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.