கோவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானை, கடந்த மாதம் 17ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் யானைகள் முகாமில் விடப்பட்டது. யானையின் கழுத்தில் சிக்னல் பட்டை அணிவித்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று (நவ., 26) வால்பாறை அருகே மந்திரி மட்டம் பகுதியில் யானை ஒரு மேட்டில் ஏறி வழுக்கி விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.