செங்கல்பட்டு தையூர் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்டபோது அங்கு ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு இருப்பதைக் கண்டறிந்தனர். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் அதனைப் பாதுகாப்பாகப் பூமியில் புதைத்து வைத்தனர். இந்நிலையில், 12 நாட்களுக்குப் பிறகு நேற்று ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர், உள்ளூர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த ராக்கெட் லாஞ்சரை அதே இடத்தில் வெடிக்க வைத்துப் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்தனர்.