ஈரோடு: தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையாகக் கருதப்படும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி 101.42 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 50.65 அடியாகக் குறைந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் இந்த அணை குறித்த கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.