மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட சிவப்பு நிற ஃபெராரி சூப்பர் காரின் உரிமையாளர் ஒருவர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் நேற்று (ஜூலை 3) ரூ.1.42 கோடி சாலை வரி செலுத்தியுள்ளார். முன்னதாக ரூ.7.5 கோடி ஆரம்ப விலை கொண்ட அந்த ஃபெராரி SF90 Stradale பறிமுதல் செய்யப்பட்டு மாலைக்குள் பணம் செலுத்த உரிமையாளருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பேரில் உரிமையாளர் இந்த வரியை செலுத்தியிருக்கிறார்.