திருச்சி செல்லும் முதல்வர் விஜய் விமான நிலையத்திலிருந்து சாலைவலம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தவெக வெற்றிக்கு நன்றி கூற நாளை (ஜூன் 1) திருச்சி செல்கிறார். தேர்தல் வெற்றிக்குப் பின் அவர் அங்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். மாலை 4 மணிக்குத் தூய வளனார் கல்லூரி திடலில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் அவர் உரையாற்றுகிறார். இதற்காக அங்குப் பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து விழா மேடை வரை 13 கி.மீ தூரம் அவர் மக்களைச் சந்திக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி