கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்து கொள்வது, பிறக்கும் குழந்தைகளுக்கு ADHD (கவனக்குறைவு குறைபாடு) ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. சுமார் 307 கர்ப்பிணி பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்த மாத்திரை சிசுவின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனையோடு மிக குறைந்த அளவில் இதனை பயன்படுத்துவது ஆபத்தை குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.