மழையில் நனைந்த பின் நீண்ட நேரம் ஈரமான ஆடைகளை அணிந்து இருக்கும் போது தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிலும் ஈரமான உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிந்து இருந்தால் பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் ஏற்படும். இதன் காரணமாக அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஈரப்பதமான பகுதியில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். எனவே அங்கு சொறி அல்லது பருக்கள் தோன்றும். பின்னாளில் இவை பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது.