பொருளாதார பேரிடர் அபாயம்.. மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையால் இந்தியப் பொருளாதாரம் பேரிடரை நோக்கிச் செல்வதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். தங்கம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லும் பிரதமரின் கோரிக்கை, பொருளாதாரத் தள்ளாட்டத்தைக் காட்டுவதாகக் கூறியுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதையும், ரூபாய் மதிப்பு ரூ.96 ஆக வீழ்ந்ததையும் குறிப்பிட்ட அவர், கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை வழங்கிவிட்டுச் சாமானியர்களை வற்புறுத்துவது வேடிக்கையானது என்றார்.

தொடர்புடைய செய்தி